Saturday, April 9, 2011

அபாயகரமான கனவுகள்



நான் என்னுடைய முந்தைய blog posting-ல் முதலில் கனவுகளின் சக்தியைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியிருந்தேன். நாம் பிறருக்கு வழிகாட்ட, கொடுத்து உதவ கனவு காண வேண்டும் என்ற ஆலோசனையோடு முடித்திருந்தேன். பிறருக்குக் கொடுப்பதால் வாழ்வில் பல வசதிகள் கிடைக்கப் பெறலாம். மாறாக பிறரை ஏமாற்றியோ, வஞ்சித்தோ இல்லை மோசமான செயல்களினாலோ நம்முடைய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

அரசியல் பலம், அரசு அதிகார பலம், பண பலம், மற்றும் ஒருவருடைய உயர்ந்த நிலையின் சௌகர்யங்கள் போன்ற எண்ணற்ற விஷயங்கள் மக்களை மிகவும் திமிர் பிடித்தவர்களாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் இந்த பலம் கொண்டு செயல்படும் போது சாதாரண மனிதனுக்கோ அல்லது அவர்கள் கீழ் பணிபுரிபவர்களுக்கோ அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்க எந்த ஒரு வழிமுறையும் தெரிவதில்லை. இதைத் தான் உலகளவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த நாடுகளில் நல்ல தலைவர்களைக் கொண்டு அரசாங்கம் அமைக்கப்படுகிறதோ, எங்கு குடிமக்கள் ஒன்று கூடி அவர்களின் உரிமைகளுக்காக போராட தயராக உள்ளார்களோ அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம், சாலைகள், இதர அமைப்புகள் மற்றும் அரசாங்க நிர்வாகம் என அனைத்தும் நன்றாக இருந்து அந்நாடுகள் வல்லரசு நாடுகளாக உருவெடுக்கின்றன.

அருமையான சுற்றுச் சூழலில் வாழ கனவுகாணும் ஒரு சாதாரண மனிதன் சீக்கிரமே தான் சார்ந்திருக்கும் தொந்தரவு மிக்க சூழலிலிருந்து வெளிப்பட்டுவிடுவான். அப்படியென்றல் நம் இளய தலைமுறையினர் அவர்களின் கனவுகளின் வலிமையை உணர்ந்தவுடன் அவர்கள் சார்ந்திருக்கும் சூழலில் நம்பிக்கை இழந்து விட்டால், தங்களின் இலட்சியத்தை அடைவதற்காக இடம் பெயர்ந்து விடுவர் என்பதும் தெளிவாகிறது. இந்த இடப்பெயர்ச்சி தாய் நாட்டுக்கு மிகவும் மோசமானதாகும்.

பல குடும்பங்க்களில் குறுகிய மனப்பான்மை கொண்ட உறுப்பினிர்களின்
சுய நலமானகனவுகளினால் அவர்களைச் சுற்றியிருக்கும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். என்றலும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து விடுவோம் என்று கனவு கண்டார்களேயானால் அவர்களுடைய கனவும் நனவாகிவிடுகிறது. ஒரு சூழ்நிலையிலிருந்து தப்பிப்பது ஒரு முடிவல்ல, ஒரு ஆரம்பமே ஆகும். ஆனால் பாதிக்கப் பட்டவர்கள் இதை ஒரு முடிவாகக் கருதிக் கொண்டு, கஷ்டங்களிலிருந்து வெளி வந்து விட்டோம் என்று நிம்மதியாக ஆயாசப் படுத்திக் கொள்கிறார்கள்.






கனவு என்பது மிடாஸ் என்ற மன்னனின் தொடுதல் போன்றது. எனவே அன்பையும், பரிவையும், கலந்துதான் கனவு காண வெண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வெற்றியும் நம் செயல்களினால் பெற்ற பலனில் பெரும்பகுதியை நாம் சார்ந்திருக்கும் சமுகத்தி்ற்கு பகிர்நதளித்து விட்டு மிச்சம் இருப்பதையே நமதாக்கிக்கொள்வதாக இருக்கும்.

பெரும்பாலான வியாபார முறைகளில் கூட மொத்தமாக வியாபரம்செய்த தொகையில் 5% -30% வரை நிகர லாபம் இருக்கும். அதற்கும் மேலே இருந்தாலும் வருமான வரி என்ற பெயரில் அரசாங்கம் ஒரு கணிசமான தொகையைப் பெற்றுக் கொள்கிறது. எனவே இநத பகிர்நதளிப்புக்குப் பிறகு வியாபரத்திற்குள் அதிகப்படியாக உள்ள தொகையே வியாபாரம் நடத்துபவர்க்குக் கிடைக்கிறது.

மக்கள் வியாபார முறையில் எதையும்பொருட்படுத்தாது பேராசை கொள்ளும் போது நிகர லாபம் மிகவும் உயர்ந்து போகலாம். அவ்வாறு ஏற்படும் போது அந்தந்த வியாபாரத்தின் உரிமையாளர்களைத் தவிர அதில் சம்பநதப்பட்ட ஏணைய பணியாளர்கள், பொருள் விற்பனையாளர்கள், வாடிக்கையாளரகள், சேவை அளிப்பவர்கள். மற்றும் யாரெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களோ, அவர்களெல்லாம் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மனித இனம் பல சறுக்கல்களை சந்தித்து இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் சிலருடைய சுயநலமான கனவுகள் தான். உதாரணமாக ஹிட்லர், அலெக்சாண்டர் ஏன் அசோகரையும் கூட குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் தங்களைத் தாமே சிறந்த வீரர்கள் என எண்ணியிருந்தனர். ஆனால் அவர்கள் பேராசை கொண்ட சர்வாதிகாரிகளாகவும், இரக்கமற்ற போராளிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் அசோகர் புத்த மதத்தைப் பின்பற்றியதால் மக்களுக்கு நிறைய நல்ல சேவைகளைச் செய்தார். அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஹிட்லரோ தனது ஆணவத்தினால் இளவயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். தன்னை பிரதானமாகக் கொண்டு உருவாக்கிக் கொள்ளும் கனவுகள் அபாயகரமானவைகளாக இருப்பதோடு அவற்றினால் வரும் வெற்றிகளும் பயனற்றுப் போய்விடுகின்றன.

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியில் வருகின்ற கனவு காண மிகவும் மனதில் துணிச்சல் வேணடும். ஸ்திரமான நல்ல கனவுகள் வேகமாக பரவும் தன்மை கொண்டவை. அவை மற்றவர்களிடத்தும் வேறூன்றி படரக் கூடியவை. மக்கள் எப்போது உங்களுடைய கனவை நம்பத் தொடங்குகிறார்களோ அப்போது அவர்கள் உங்களுடன் இணைந்து அளிக்கும் கூட்டு சக்தி, நீங்கள் நினைத்ததைக் காட்டிலும் பெரிய அளவில் உங்கள் கனவு வெற்றியை அடைய வழி அமைக்கும்.






சிலர் பேராசை கொண்ட லட்சியக் கனவை உருவாக்கிக் கொள்கிறார்கள். பிறகு மக்களைச் சுரண்டி அமைதியைக் குலைத்தும் விடுகிறார்கள். இப்பொழுதும் கூட இது ஒரு முடிவிற்கு வரவில்லை. முதலில் இது சுயனலனிற்காக மக்களை சாகடிப்பதாக இருந்தது. இப்போது இது பொருளாதார சுரண்டலாக மாறியிருக்கிறது . மீடியாக்கள் குப்பையான விஷயங்களைப் பரப்பித் தங்களை நிலைநாட்டிக் கொள்கின்றன. இது முழுக்கமுழுக்க் ஆள்பவருக்கு மிகவும் சாதகமாக இரு்ககிற ஒரு விஷயம். வளர்நத நாடுகளில் மக்களிடையே இதைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் அவர்கள் மீடியாவுக்கு அடிமை ஆவதில்லை. கனவுகளை ஊக்குவிக்காத கலாச்சாரம் கொண்ட பின்தங்கிய நாடுகளில் மீடியா மக்களை ஆட்கொள்கிறது.

மதத் தலைவர்கள் தங்களை பின்பற்ற நிறைய பேர் வேண்டும் என்று பேராசை கொண்டு மக்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் இருப்பதைக் கற்றுக் கொடுக்கிறார்கள். கனவுகள் ஒருவர் செயல்படும் பொருட்டு நிச்சியமாக மன அழுத்தத்தைக் கொடுக்கத் தான் செய்யும். இந்த மன அழுத்தத்தைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மன அழுத்தம்
காணாமல் போய்விடும். வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கனவுகள் அடக்கப்படக் கூடாது. மன அழுத்தமே இல்லாவிட்டால் நாம் தாவரங்கள் போல் ஆகிவிடுவோம். விலங்க்கினமாகப் படைக்கப் பட்ட நமக்குள், மனஅழுத்தம் உணர்ச்சி, பற்று என்பவை எல்லாம் அமையப்பெற்றிருக்கிறோம்.

கனவுகளைப் புரிந்துகொள்வோம். வளர்ச்சியின் திசை நோக்கி நம் சக்தி பிரவாகத்தைத் திருப்பிவிடுவோம். நம்மை கூட்டம் கூட்டி பிறர் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து சீக்கிரமே வெளி வருவோம்.

***********************************

No comments:

Post a Comment